உடையட்டும் காந்தியோடு புத்தர் இராமர் சிலைகளும்..!

இவனுக்காடா சிலை.
அடே சிவமோகா.
நீ போற்றும் காந்தி
காம மோகம் கொண்டவன்ரா.
அவன் ஆடாத ஆட்டமும்
போடாத கூத்தும் கொஞ்சகிஞ்சமல்ல சிவமோகா.
வெள்ளையர்களோடு பாலோடு வெண்ணையாய் கலந்தவன்.
நாட்டு விடுதலைபோராளிகளை
காட்டியும் கொடுத்தானாம்.

தன்னை மிஞ்சி எவனும்
உயர்வு கொள்ள கூடாது
எனும் செருக்கும் கொண்டவனாம்.
சுபாஸ் சந்திரபோஸ் போன்ற
தியாகிகளை தீவிரவாதி என்று சொல்லி
வெள்ளையர்க்கு வால்பிடித்தவராம்.
அடே சிவ மோகா
காந்தி பொல்லாத
ஊத்த காந்தியாம்.o
களிப்பாட்டமென்றால்
தள்ளாத வயதிலும் துள்ளி திரிந்தவராம்.
விடுதலைப்போராளிகள் தியாகத்தால்
வென்றுவிட்ட விடுதலையை
ஒரு அகீம்சை நாடகமாடி
பிரித்தானியரிடம் விடுதலை வாங்கி கொடுத்தாராம்.
இதெல்லாம் வெள்ளையரின் நிகழ்ச்சி
நிரலின்படியே நடந்ததாம்.
அடே சிவமோகா.
வேண்டாமெடா இனியும்
காந்தி மோகம்.
தமிழனை கருவறுத்த இந்த ஆரிய தாத்தாவுக்கு
சிலை வைத்திட தமிழர் நிலமென்ன
அகன்றுவிட்ட இந்தியாவோ?
மண்ணுக்காக மடிந்திட்ட இராவணன், சோழன் பண்டாரவன்னியன் ,சங்கிலியன், எல்லாளன்,
புலிவீரர்களோடு பல்லாயிரம் போர்களுண்டு
எங்கள் மண்ணில் சிலையாக்கி பூசித்திட.
உடைத்தெறி புத்தனோடு காந்திகளையும்.
தமிழ் மண் தமிழர்க்கே அன்றி
எமை அழித்தவனுக்காக அல்ல என
சங்கெடுத்து வீர முரசறை.
பௌத்தம் ,இந்துத்துவம், காந்தித்துவமெல்லாம்
தவிடி பொடியாகட்டும்
இனி உருவாகப்போகும் புதிய உலக ஒழுங்குதனில்.
எமை வீழ்த்தியவன் எல்லாம்
இனி எழவே முடியாத காலமே
இனித்தோன்றும்.
தமிழே வாழும் தமிழே எழும்
என எழுக தமிழாக தமிழனே
பொங்கி எழுவான்.
அதுவரைக்கும் உடைந்து நொருங்கட்டும்
காந்தி சிலைகளோடு புத்தர்,இராமர் சிலைகளும்.

-Arul Vinayagamoorthy-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*