சித்திரை முதல் பங்குனி வரை எந்தக் கீரை கூடாது தெரியுமா?

கீரை என்றாலே நம்மில் பலர் முகம் சுளிப்பது உண்டு.

உணவுப் பட்டியலில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகளில் கீரைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. காய்கறிகளை பூ, காய், தண்டு, இலை, கிழங்கு என்று ஐந்து வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், எளிதாகவும் விரைவாகவும் செரிமானம் ஆவது கீரைகள்தான். அதோடு, கீரைகளில் ஏராளமான சத்துக்களும் பலன்களும் கொட்டிக்கிடக்கின்றன.

கீரைகளில் இரும்பு, கால்சியம், பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவற்றில், பச்சையம் நிறைந்து உள்ளது. லெசித்தின் (Lecithin), கரோட்டினாய்டு (Carotenoid), ஆல்கலாய்டு (Alkaloid) மற்றும் ஆக்சாலிக் அமிலம் (Oxalic Acid), சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற கனிமங்களும் நிறைந்து உள்ளன. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும்.

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. தினமும் கீரை சாப்பிடுவது சாத்தியமற்றது என்றால், அவ்வப்போது கிடைக்கும் விதவிதமான கீரைகளைக் சாப்பிடலாம்.

இரவில் கீரையை சாப்பிடக் கூடாது? ஏன்?

இரவில் தூக்கத்தாலும் குளிராலும் செரிமான சக்தி குறைவாக இருக்கும். இரவில் கீரை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிகள் உண்டாகலாம்.

செரிமானக் கோளாறு, வயிற்று எரிச்சல், வயிற்று மந்தம் போன்றவை ஏற்படலாம். செரிமானம் ஆக, மலத்தை வெளியேற்ற, வெறும் கீரைகள் மட்டும் உதவுவது இல்லை.

எனவே, கீரைகளை ஏதேனும் காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறு ஏற்படாமல் இருக்கும். `கீரைகளைத் தனியாக உண்பதால், பல நன்மைகள் கிடைக்கின்றன’ என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

கீரைகளை வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டியவை…

புதிதாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும்.
இலைகள் மஞ்சள் நிறமாக இருந்தால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இலைகள் வாடி, வதங்கி இருக்கக் கூடாது. அதிகம் ஓட்டை உள்ள இலைகளாக இருந்தால், அந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.
பூச்சியால் அதிகம் தாக்கப்பட்ட கீரைகளை வாங்கக் கூடாது. ஆர்கானிக் கீரைகளாக பார்த்து வாங்குவது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*