இலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை வெளியிட்ட சசிகலா நடராஜன்!

இலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மேலும், அத்துமீறி கடற்தொழிலில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் ராமேசுவர கடற்தொழிலாளர்கள் 584 படகுகளில் கச்சத்தீவை அண்மித்த பகுதியில் கடற்தொழிலில் ஈடுப்பட்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இவை கண்டிக்க தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரமான கடற்தொழிலை பாதுகாத்து தர வேண்டிய பொறுப்பு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து இலங்கையில் தடுத்து வைக்கப்படுவதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த நிலையில் எதிர்வரும் தை பொங்களுக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக கடற்றொழிலாளர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் சசிகலா நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*