தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா-2017!

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேற்பார்வை மற்றும்

வழிகாட்டலில் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டதரணி டபிள்யு.ஜீ.எஸ்.எரந்திக அவர்களின் தலைமையில் தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா-2017 இம்முறை தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மைதானத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது.

2000 இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் இளைஞர் கழக சம்மேளனம்,தேசிய இளைஞர் சேவை மன்றம்,தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு,கைத்தொழில் மற்றும் வாணிக அமைச்சு மற்றும் வட மாகாண சபை என்பனவற்றின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி மற்றும் 09ம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வடமாகாண இளைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் முல்லைத்தீவில் இருந்து 30 இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளதோடு கடந்தவருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*