ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில்புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டி

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில்

2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 06 மாணவர்களுக்கு, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கோடு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அந்த பாடசாலைக்கு ஒரு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் துவிச்சக்கரவண்டி பரிசாக தருவதாக வாக்களித்திருந்தார்.

அந்த வகையில் கடந்த வாரம் இரு மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மூன்றாவது துவிச்சக்கரவண்டியை கடந்த வெள்ளி 06-01-2017 காலை 11:00 மணியளவில் குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வி.பாலச்சந்திரன் அபிஷா அவர்களுக்கு அவரது தந்தையார் சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் துவிச்சக்கரவண்டியை மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார், குறித்த துவிச்சக்கரவண்டிகளை அமைச்சர் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG) நிதியில் இருந்து கொள்வனவுசெய்து, மாணவர்களது நலனுக்காக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*