ஏர் இந்தியாவின் விமான சேவை மோசமான நிலையில்..!

உலகின் மோசமான விமான சேவை வழங்கும் 10 விமான நிறுவனங்ளில் இந்திய விமான சேவையான ‘ஏர் இந்தியா’ இடம்பிடித்துள்ளது.

போர்ட்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்கான கருத்துக்கணிப்பை விமானப் பயணிகளிடம் நடத்தியது. இணைய டிக்கெட் புக்கிங் காலதாமதம் மற்றும் குளறுபடி, விமானத்துக்குள் பணிப்பெண்களின் மோசமான பயணிகள் சேவை, நேர தாமதம் ஆகியவற்றில் ஏர் இந்தியா நிறுவனம் முன்னணி வகிப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நிலமை இவ்வாறிருக்க, 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1086 கோடி லாபம் ஈட்டும் இமாலய இலக்கை நிர்ணையித்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம். இந்த லாப இலக்கை அடையவேண்டுமானால் ஏர் இந்தியாவின் ஒருநாள் லாபம் சராசரியாக 11 கோடியாக இருக்கவேண்டும். ஏர் இந்தியாவின் முதன்மைச் செயளாலர் அஷ்வானி லோஹானி சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து, ஏர் இந்தியாவின் வருவாயைப் பெருக்க ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இனி வரும் காலங்களில் பயணிகள் சேவையில் உள்ள குறைபாடுகள் படிப்படியாகக் களையப்படும் என லோஹானி உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியாவைத் தவிர ஏர் சைனா, ஹாங்காங் ஏர்லைன்ஸ், பில்லிப்பைன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், குவாடர் ஏர்வேஸ் ஆகிய விமான சேவை நிறுவனங்கள், உலகின் மோசமான விமான சேவை நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*