திராட்சை சாறை தினமும் குடித்து வந்தால்!

திராட்சைப் பழத்தில் விட்டமின் A, B, C, K, மற்றும் மாங்கனீசு, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பலவகையான பைட்டோ நியூட்ரின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எனவே இந்த திராட்சைப் பழத்தை அப்படியே சாப்பிடாமல் இதன் சாறு எடுத்து குடித்தால் இதனுடைய முழுச் சத்துக்களையும் நாம் பெறலாம்.

திராட்சைப் பழத்தின் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பச்சை திராட்சைப் பழத்தின் சாறை விட கருப்பு திராட்சை பழத்தின் சாறு, நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்கிறது.

திராட்சை சாறை தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கருப்பு திராட்சையின் சாற்றை குடித்து வந்தால், நமது உடலின் மெட்டபாலிசத்தின் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும்.
திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது உடம்பின் ரத்த அழுத்தத்தைத் கட்டுபடுத்தி, இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து விட்டு, இந்த திராட்சையின் சாறு குடித்து வந்தால், நமது உடம்பில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.

திராட்சை சாற்றைக் குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*