மட்டக்களப்பு திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலய காணியை அபகரிக்க முயற்சியா? மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு – ஆரையம்பதி கிழக்கில் தமிழ் மக்களின் எல்லையில் அமைந்துள்ள திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலயம் உரிய வசதிகள் இன்றி ஆலயத்தின் அருகில் வாழும் மக்களால் முடிந்தளவு பராமரிக்கபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

குறித்த ஆலத்திற்குரிய காணியில் வேலி அமைக்கப்பட்ட போதிலும், காலநிலை மாற்றத்தால் வேலி அழிந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஆலய வளவிற்குள் நுளைந்து சகோதர இனத்தினை சேர்ந்த சிலர் ஆலய வளவினை அளந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

இதனை கண்ட மக்கள் அவர்களிடம் வினவிய போது இது தங்கள் காணி என கூறி சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஆலய நிலத்தினை அபகரிக்க மறைமுகமாக நடக்கும் முயற்சியா என்பது தொடர்பில் மக்கள் சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து தமிழ் அரசியல் வாதிகள் கவனம் செலுத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*