15 மாத தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் களம் இறங்குகிறார் ஷரபோவா!

15 மாத தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம்

ஜெர்மனியில் நடக்கும் ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் ஷரபோவா மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

தடை காலம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது. மீண்டும் டென்னிஸ் போட்டிக்கு திரும்ப தன்னை ஆயத்தப்படுத்தி வரும் ஷரபோவா, தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் ஜெர்மனியில் நடக்கும் ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் அவர் மூன்று முறை பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*