நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை-மஹிந்த ராஜபக்ச!

நெருக்கடிகளிலிருந்து தப்பி செல்வதற்காக

தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று டுவிட்டரில் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் சர்வதேசம், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. இதன்மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த,

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தவறு செய்த நபர்களுக்கு எதிராக இலங்கையில் காணப்படுகின்ற சட்டம், தமது ஆட்சிக்காலத்திலும் அமுல்படுத்தப்படும். தற்போதைய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டவிரோதமானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவை சட்டரீதியானதாக மாற்றுவதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் ஆயத்தம் என்றால் அதிகாரம் வெகு விரைவில் பெற்றுள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் கடன் அளவில் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*