மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டது.!

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால்

கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகள், யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு ஆரம்பித்த குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2015 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் முழுவதுமாக 860 குடும்பங்கள் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது, அதனை அடுத்து கடந்த 2016 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்கள் வீதம் 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 52 பயனாளிகளுக்கு வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் இரண்டாம் கட்டமாக 11-01-2017 புதன் காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. அவ்வாறு இன்று வழங்கப்பட்ட உள்ளீடுகளில் 07 குளிர்சாதன பெட்டிகள் அவர்களது வியாபாரத்தை மேம்படுத்தவும், மாடு வளர்ப்பிற்கு மாடுகள் கொள்வனவுசெய்யப்பட 06 பேருக்கான காசோலைகள், கோழி வளர்ப்பிற்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்ய 02 பயனாளிகளுக்கும் அத்தோடு தோட்டச் செய்கைக்கு குழாய்க்கிணறு அடிப்பிப்பதற்காக 01 பயனாளிக்குமாக மொத்தம் 09 காசோலைகளும் இன்றய தினம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*