புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிக்கு உள்ளக விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு!

மன்னாரில் சிறந்த கல்லூரியான புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்

அவர்களின் 2016 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து (CBG – 2016) ரூபா 50,000 பெறுமதியான மேசைப்பந்து விளையாட்டுக்குரிய உபகரணங்கள் மேசைப்பந்து மேசை, வலை, பந்துகள் மற்றும் துடுப்புகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (11.01.2017) புதன்கிழமை மதியம் 12 மணியளவில் அமைச்சரின் உப அலுவலகத்தில் நடைபெற்றது, குறித்த நிகழ்வில் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பழையமாணவர் சங்க நிருவாககுழு உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர் அவர்கள் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது பலவருடகாலமாக பயிற்ச்சிக்காக பாவிக்கப்படும் மேசைப்பந்து மேசையானது உடைந்த நிலையில் கயிறுகளினால் கட்டப்பட்ட நிலையில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதனை கண்டதோடு, கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு அல்லலுறும் நிலமையினை தெளிவுபடுத்தினார். அங்கு நிலைமையினை நேரில் கண்ணுற்ற அமைச்சர் தமது நிதி ஒதுக்கீட்டில் குறித்த விளையாட்டுக்கான உபகரணங்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததோடு அவ்வுறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொருட்களை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாணவர்களின் விளையாட்டினை ஊக்குவிப்பதற்கு வழங்கப்படும் உபகரணங்கள் சரியானமுறையில் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*