திருகோணமலையில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!

சமஷ்டி ஆட்சி உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து திருகோணமலையில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

01. வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி அதிகாரப் பகிர்வே நாங்கள் கோரும் அரசியல் தீர்வு.

02. கலப்பு நீதிமன்றம் உடனடியாக உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

03. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

04. நடந்தேறிய சித்திரவதைகளும் படுகொலைகளும் விசாரிக்கப்பட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

05. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியும் இழப்பீடுகளும் உடன் வழங்கப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, திருகோணமலை உட்துறைமுக வீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என கூறி ஒவ்வொரு அரசாங்கமும் தம்மை ஏமாற்றுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நொயல் இமானுவேலிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*