அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது !

அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் அரசாங்கம்

பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி கோரியுள்ளார்.

இது தொடர்பில் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் எனவும் அவர்களுடன் மட்டும் அரசாங்கம் தொடர்பு பேணக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இது அழகு ஆகாது எனவும் சரியான அரசியல் தீர்வினை எட்ட வேண்டுமாயின் அரசாங்கம் அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வினை எட்ட முயற்சிக்க வேண்டும் எனவும் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*