ஓட்டமாவடியில் அதிசய மணிக்கூட்டு கோபுரம் கவனிப்பார் அற்ற நிலையில்!

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி

பிரதேச சபைக்குற்பட்ட கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அதன் சுற்று வட்ட பகுதி கவனிப்பார் அற்ற நிலையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடி பிரதேச அழகு படுத்தல் வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் பல மாதகாலமாக செயல் இழந்து காணப்படுவதுடன் இருபத்திநாலு மணிநேரமும் ஒரோ நேரத்தை காட்டும் அதிசய மணிக்கூட்டு கோபுரமாக காட்சியளிக்கின்றது.

மணிக்கூட்டு கோபுரமும் அது அமைத்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்ரூற்று தடாகம் டெங்கு நுளம்பு பரவும் விதத்திலும் ஏனைய பகுதிகளில் மிருகங்களின் மண்டை ஓடு ,எழும்புகள் உள்ளிட்ட எச்சங்கள் காணப்படுவதுடன் இவ்விடம் ஓட்டமாவடி பிரதேச சபையின் உரிய பராமறிப்பு இல்லாமையினால் பற்றைகாடுகள் வளர்த்து வருவதுடன் கால் நடைகளின் மேச்சல் தரையாக மாறியுள்ளது இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பயனையும் அளிக்காத இடமாகவும் மாறி வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*